முகப்பு /செய்தி /உலகம் / மெக்சிகோவில் போதைப் பொருள் கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு: இந்திய பெண் என்ஜினீயர் பலி ஆன சோகம்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு: இந்திய பெண் என்ஜினீயர் பலி ஆன சோகம்!

அஞ்சலி ரியோட்

அஞ்சலி ரியோட்

அஞ்சலி  இரவு 10.30 மணியளவில்  லா மால்கெரிடா உணவகத்தில் சக சுற்றுலா பயணிகள் சிலரிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வங்க போதைப் பொருள் கும்பல், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள்  கும்பல் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த பெண் என்ஜினீயரான  அஞ்சலி ரியோட். என்பவர் உயிரிழந்தார்.  தனது 30வது பிறந்த நாளை கொண்டாட சென்றவர், இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக கூறப்படுகிறது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப் பொருட்கள் புழக்கம் என்பது சற்று அதிகமாகவே உள்ளது. போதைப் பொருள் விற்பனை,  கடத்தல் போன்றவற்றில் ஏராளமான குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த குழுக்கள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவதுண்டு.

மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள துலும் நகரில் கடந்த புதன்கிழமை இரவு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.  இந்த தாக்குதலில்  இந்தியாவைச் சேர்ந்த அஞ்சலி ரியோட்   உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான  அஞ்சலி ரியோட் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சலி அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்று அங்குள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பயணங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அவ்வப்போது பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை... இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது : பாபா ராம்தேவ்!

சான் ஜோஸ் நகரில் உள்ள பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வந்த உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா  என்பவரை அஞ்சலி  ரியோட் திருமணம் செய்துகொண்டார்.  இந்நிலையில் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கணவருடன்  அமெரிக்காவி இருந்து மெக்சிகோவின்  துலும் நகருக்கு சென்றுள்ளார்.

இரவு 10.30 மணியளவில்  லா மால்கெரிடா உணவகத்தில் அஞ்சலி   சுற்றுலா பயணிகள் சிலரிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வங்க போதைப் பொருள் கும்பல், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அஞ்சலி உயிரிழந்துள்ளார்.  அஞ்சலிக்கு இறுதி சடங்குகளை செய்ய அவரது உடலை இமாசலபிரதேசம் கொண்டுவருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநரை அறைந்த நபர்: வைரலாகும் வீடியோ!

First published:

Tags: Gun shoot, INDIAN, Mexico