உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினரை வெளியுறவு அமைச்சகம் தொடர்பு கொண்டு விபரங்களை கூறியதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுடன் இந்தியா நட்பு பாராட்டி வரும் நிலையில், இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also read... Russia-Ukraine Crisis: அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக ரஷ்யா மிரட்டல் - ஐநா அவசர கூட்டத்தில் கண்டனம்
இதுதொடர்பாக மத்திய வெளியுவு செயலர், ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதரர்களை தொடர்பு கொண்டு, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் கார்கி மற்றும் சில நகரங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உயிரிழந்த மாணவர் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க -
'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' : ஐநா அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு
உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இன்றைக்குள் தலைநகர் கீவ்வை விட்டு வெளியே இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் போரை இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இன்று இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக இன்று கீவ்வை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரயில்கள் அல்லது வேறு எந்த போக்குவரத்தை பயன்படுத்தி இந்தியர்கள் கீவ்வை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய மாணவர் ஒருவர் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.