முகப்பு /செய்தி /உலகம் / டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 81.18 ஆக வர்த்தமாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 81.18 ஆக வர்த்தமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 80 ரூபாய் 87 காசுகளாக சரிந்துள்ளது. இதன் தாக்கத்தால், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்த இரண்டாது நாளாக சரிவை சந்தித்தது..

பணவீக்கம், உக்ரைன் போர் எதிரொலி போன்ற காரணங்களால் பல்வேறு நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்ந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடு செய்வோரின் கவனம், கணிசமாக அமெரிக்க டாலரின் பக்கம் திரும்பியுள்ளது.

இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் அதலபாதாளத்துக்கு சென்றது. தற்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 87 காசுகளாக சரிந்துள்ளது.

மேலும், அமெரிக்க டாலருக்கான மதிப்பு கூடியதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பெருமளவு பங்குகளை விற்க தொடங்கினர்.

இதனால், வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 119 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்து 629 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

Read More: நெப்டியூன் கிரகத்தை துல்லியமாக படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. நாசா வெளியிட்ட அட்டகாச புகைப்படம்

ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் வெளியேறுவதால், இந்திய பங்குச்சந்தை மேலும் சரிவை சந்திக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Dollars, Indian Rupee, US dollar