ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானில் நடந்த மோதலில் பிரபல இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டார்!

ஆப்கானில் நடந்த மோதலில் பிரபல இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டார்!

டேனிஷ் சித்திகி

டேனிஷ் சித்திகி

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள், ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி, ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேபாள பூகம்பம் என உலகின் பல முக்கிய சம்பவங்களை தனது புகைப்படம் மூலம் உலகுக்கு ஆவணப்படுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் - பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலை பதிவு செய்வதற்காக சென்ற இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டுள்ளார்.

  கந்தஹாரில் ஆப்கன் படைகள் - தாலிபான்களுக்கு இடையே நடந்து வரும் மோதல் குறித்து கடந்த ஒரு வாரமாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி அங்கிருந்து பதிவு செய்து வந்துள்ளார். இதனிடையே, ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்திய போது, சித்திகி அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு, டேனிஷ் இன்று காலை தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து தாலிபான்கள் பின்வாங்கயதும், டேனிஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், துரதிர்ஷடவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுனத்தின் தலைமை அதிகாரி மைக்கேல் ஃப்ரீடன்பெர்க் மற்றும் தலைமை ஆசிரியர் அலெஸாண்ட்ரா கல்லோனி விடுத்துள்ள அறிக்கையில், நாங்கள் ஆப்கானில் இருந்து மேலும் தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

  Also read: மருத்துவமனைக்கு தீ.. கலவரத்தில் 72 பேர் உயிரிழப்பு... தென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன?

  டேனிஷ் ஒரு சிறந்த பத்திரிகையாளர், அர்ப்பணிப்புள்ள கணவர், தந்தை மற்றும் நாங்கள் மிகவும் நேசித்த சக ஊழியர் ஆவார். இதுபோன்ற மோசமான சமயத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

  புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக் 2010ம் ஆண்டு முதல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள், ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி, ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேபாள பூகம்பம் என உலகின் பல முக்கிய சம்பவங்களை தனது புகைப்படம் மூலம் உலகுக்கு ஆவணப்படுத்தியுள்ளார்.

  ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியை ஆவணப்படுத்தியதற்காக 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதும் புலிட்சர் விருதும் வென்றுள்ளார் சித்திகி.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Afghanistan, Taliban