ஹோம் /நியூஸ் /உலகம் /

சிங்கப்பூரில் போலீஸ்காரரைப் பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியர்: 14 வாரங்கள் சிறைத் தண்டனை

சிங்கப்பூரில் போலீஸ்காரரைப் பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியர்: 14 வாரங்கள் சிறைத் தண்டனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியர் தேவராஜ் தமிழ் செல்வனுக்கு 14 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியர் தேவராஜ் தமிழ் செல்வனுக்கு 14 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதோடு மட்டுமல்லாமல் இந்தக் காரியத்தைச் செய்த தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 3 ஆண்டுகள் வண்டி ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது. ஏற்கெனவே ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டும் மீறி ஒட்டியது போலீஸார் முன்னிலையில் மாஸ்க்கை கழற்றி விட்டு வேண்டுமென்றே இருமியது உள்ளிட்ட வழக்குகளில் அவருக்கு 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி செங் தியாம் மேலும் 10 குற்றச்சாட்டுகளையும் தேவராஜ் தமிழ்ச்செல்வன் மீது வைத்தார். அதாவது பொது இடத்தில் குடித்து விட்டு சுற்றுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளாகும் இவை.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியன்று ஒரு பெண்ணிடமிருந்து போலீசாருக்கு வந்த தொலைபேசியில் தனது உறவினரின் காதலன் வீட்டுக்கு வந்து வன்முறை செய்கிறான் என்று புகார் அளித்தார்.

உடனே 3 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர், அப்போது தேவராஜ் காதலியின் முகத்தில் அறைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தேவராஜ் தன் முகக்கவசத்தை வேண்டுமென்றே அகற்றி விட்டு போலீஸ்காரரைப் பார்த்து இருமினார். மேலும் மருத்துவப் பணியாளர்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இந்த வழக்கு விசாரணையும் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

இவர் ஏற்கெனவே திருட்டு கேசில் உள்ளே போயிருக்கிறார், சிங்கப்பூர் ஆயுதப்படை சிறையில் 6 மாதங்கள் கழித்தார். பிறகு 2019-ல் அவர் 8 வாரங்கள் சிறையில் தள்ளப்பட்டார்.

First published:

Tags: Singapore