கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகப் போட்டி இன்றி தேர்வாகியுள்ளார். பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
பிரிட்டனில் நிலவும் பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியாமல் லிஸ் டிரஸ் அண்மையில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியில் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் தலைவராகவும் தேர்வாகியுள்ளார். ரிஷி சுனக் - க்கு எதிராகக் களத்திலிருந்த பென்னி மார்டாண்ட் சரியாக 6.30 மணிக்கு ரிஷி சனக்- விற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் பதவியில் நிற்க விருப்பம் தெரிவிக்க இன்று இந்திய நேரபடி 6.30 மணி வரையே கால அவகாசம் இருந்த நிலையில், பென்னி மார்டாண்ட் விலகியுள்ளார். பிரிட்டன் அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில் தற்போது இந்த முடிவு வெளிவந்துள்ளது. 357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியில் 200 எம்.பி.களுக்கு மேல் ஆதரவை ரிஷி பெற்றுள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார். பிரதமராக ரிஷி, பிரிட்டனின் பொருளாதாரத்தை நிலை கொண்டுவரத் திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பொருளாதார மேம்பாடு, பண வீழ்ச்சியைச் சரி செய்தல், கட்சியில் ஒற்றுமையைக் கொண்டுவருதல் என்று ரிஷி முன் பெரும் பொறுப்புக்கள் உள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக் - விற்கு பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பதவியேற்பு நாளை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Britain, Prime minister, UK