உலக சுகாதார நிறுவன அறக்கட்டளை தலைமை நிர்வாகியாக இந்தியர் நியமனம்..

உலக சுகாதார நிறுவன அறக்கட்டளை தலைமை நிர்வாகியாக இந்தியர் நியமனம்..

உலக சுகாதார நிறுவன அறக்கட்டளை தலைமை நிர்வாகி அனில் சோனி

உலக சுகாதார நிறுவன அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியாக, இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  உலக சுகாதார நிறுவனத்தின் அறக்கட்டளை 2021-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவப்பட உள்ளது. இதற்கு தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த இவர், பல அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

  இந்த அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய மற்றும் நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனத் தலைமை முடிவெடுத்துள்ளது. ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அறக்கட்டளை, வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

  மேலும் படிக்க...நோபல் பரிசு வழங்கும் விழா.. எளிமையாகத் துவங்கியது..

  இதன் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள அனில் சோனி, 20 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார். இதற்கு முன்னதாக பில் கேட்ஸின் தொண்டு நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: