கனடாவில் தனித் தீவு... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன துபாய்வாழ் இந்தியர்!

'இதை வைத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. முதலில் அந்தத் தீவை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன்'.

கனடாவில் தனித் தீவு... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன துபாய்வாழ் இந்தியர்!
ப்ரெண்டன் லோபஸ்
  • News18
  • Last Updated: October 17, 2019, 6:37 PM IST
  • Share this:
துபாயில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் வங்கிப் போட்டி ஒன்றில் பங்கெடுத்து கனடாவில் உள்ள ஒரு தனித் தீவை பரிசாக வென்றுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டில் பிறந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரெண்டன் லோபஸ். 27 வயதான இந்த இளைஞர் தற்போது துபாயில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். துபாயில் உள்ள லைஃப்ஸ்டைல் வங்கி நடத்திய போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

‘லிவ்’ என்ற அமைப்பு மற்றும் துபாய் வங்கி இணைந்து இப்போட்டியை நடத்தியுள்ளது. மாதம் மாதம் டிஜிட்டல் பேமன்ட் முறையில் அதிகப் புள்ளிகளைப் பெறும் வாடிக்கையாளர்களுள் ஒரு அதிர்ஷ்டசாலியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
6 ஏக்கர் பரப்பளவிலான ‘ஹால்பாயிண்ட்’ என்னும் கனடாவில் உள்ள தீவு தற்போது ப்ரெண்டனுக்குக் கிடைத்துள்ளது. கூடுதலாக 1 லட்சம் திர்ஹாம் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ப்ரெண்டன் கூறியிருப்பதாவது, “இதுவரையில் எனக்கென சொந்த வீடு இல்லை. நாங்கள் குடியிருக்கும் வீட்டில் நான் இருக்கும் அறையில் கூட எனக்கு முழு உரிமை இல்லை.

இத்தகைய சூழலில் எனக்கு ஒரு தீவு சொந்தமாகியிருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. முதலில் அந்தத் தீவை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன். என் பெற்றோர் பல கனவுகள் கொண்டுள்ளனர். கனடா தீவை என் பெயருக்கு மாற்றும் சட்டவிதிமுறைகள் தற்போது நடந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் நிற்கவில்லையா..?- ’இந்த’ கூகுள் சேவைதான் காரணமாய் இருக்கலாம்!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியர்!
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்