சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த இந்தியர்கள் கைது - 2 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

news18
Updated: November 8, 2018, 1:49 PM IST
சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த இந்தியர்கள் கைது - 2 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு
மாதிரிப்படம்
news18
Updated: November 8, 2018, 1:49 PM IST
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்ததாக இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்ற பகுதியில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த செவ்வாய் அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், செல்வராஜூ மற்றும் சிவக்குமார் சுப்பிரமணியன் என்ற இரு இந்தியர்கள், அப்பகுதியில் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையின் நடுவே வானத்தில் சென்று வெடிக்கும் வகையிலான பட்டாசு வெடித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடிப்பது குற்றம் என்பதால், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Also See..

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்