Home /News /international /

சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷம்.. வெளிநாட்டில் வசமாக சிக்கிய இந்திய மருத்துவர்...

சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷம்.. வெளிநாட்டில் வசமாக சிக்கிய இந்திய மருத்துவர்...

சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷம்.. வெளிநாட்டில் வசமாக சிக்கிய இந்திய மருத்துவர்...

சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷம்.. வெளிநாட்டில் வசமாக சிக்கிய இந்திய மருத்துவர்...

மருத்துவர் கிருஷ்ணாவுக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் வழங்கப்படும் என நீதிபதி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.

    தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரில் மருத்துவர் கிருஷ்ணனை குற்றவாளி என ஸ்காட்லாந்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு ஸ்காட்லாந்து நாட்டில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 72 வயதான கிருஷ்ணா சிங். இவர் தன்னிடம் சிகிச்சை பெற வந்த 48க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளிடம் பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஸ்காட்லாந்தின் நார்த் லனார்க்ஷைர் பகுதியில் 1983ஆம் ஆண்டு முதல் மே 2018ஆம் ஆண்டு வரை அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என நிரூபணம் ஆகியுள்ளது. இவர் மீது முதல் புகாரை 2018ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் தந்துள்ளார்.

    பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களே. டாக்டர் கிருஷ்ணா தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை முத்தமிட்டும், சிகிச்சை செய்தாகக் கூறி தகாத முறையில் தொடுவதும், மோசமான விதத்தில் கமெண்டுகள் அடிப்பது போன்ற குற்றங்களை செய்ததாக இவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன.

    Also Read : ட்விட்டருக்கு விலை பேசும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்

    இந்த வழக்கு கிளாஸ்கோ உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதால் கிருஷ்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணாவுக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் வழங்கப்படும் என நீதிபதி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கிருஷ்ணா தன்னுடைய பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கிருஷ்ணா அப்பகுதியின் மிகவும் மதிப்பு மிக்க மருத்துவராக இருந்துள்ளார். 1980ஆம் ஆண்டு முதல் அங்கு மருத்துவராக பணியாற்றி வரும் இவருக்கு மெம்பர் ஆப் ஆடர் ஆப் பிரிடிஷ் எம்பயர் எனப்படும் பிரிட்டிஷ் ராணியின் மதிப்பு மிக்க விருது 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணாவை மருத்துவராக நியமித்த தேசிய சுகாதார ஆணையத்தின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    - கண்ணன் வரதராஜன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Sexual harassment

    அடுத்த செய்தி