அமெரிக்க அதிபர் டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க 38,000 ரூபாயா?

news18
Updated: June 13, 2018, 10:18 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க 38,000 ரூபாயா?
ட்ரம்ப் கார் முன்பு செல்பி எடுத்த இளைஞர்
news18
Updated: June 13, 2018, 10:18 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சென்ற கார் முன்பு நின்று செல்பி எடுப்பதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் 38,000 ரூபாய் செலவழித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடந்தது. சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் உள்ள தனியார் ஹோட்டலில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 48 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் அணு ஆயுதங்களைக் கைவிடுவது, வடகொரியா மீதான தடைகளை நீக்குவது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் மோகன் என்பவர் சிங்கப்பூர் சென்றார். அங்கு ட்ரம்ப் பயணிக்கும் வழியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அங்கு ஒரு நாள் தங்குவதற்காக 38,000 ரூபாய் அவர் கட்டணம் செலுத்தியுள்ளார். இதன்மூலம் ட்ரம்ப்பின் வாகனம் செல்லும் வழியில் நின்று, வாகனம் வரும் போது ஒரு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...