துபாயில் மசாஜ் செய்ய சென்ற இந்தியரிடம் ரூ.55 லட்சம் சுருட்டிய பெண் கொள்ளை கும்பல்!

துபாயில் மசாஜ் செய்ய சென்ற இந்தியரிடம் ரூ.55 லட்சம் சுருட்டிய பெண் கொள்ளை கும்பல்!

கொள்ளை கும்பல்

ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞரை அந்த வீட்டிலேயே அப்பெண்கள் சிறை வைத்துள்ளனர். பின்னர் அவரை மிரட்டி 250,000 திர்ஹாம் பணத்தை அவர்களின் பல்வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.

  • Share this:
 

துபாயில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் மோசடி செய்த 4 பெண்கள் அடங்கிய கொள்ளை கும்பல் அவரிடமிருந்து 55 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் டேட்டிங் அப்ளிகேஷனில் (Tinder) விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அழகான பெண்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தது, இந்த பெண்கள் மூலம் தங்களது பார்லரில் பாடி மசாஜ் செய்யப்படும் எனவும் ஆபரில் ஒரு செஷனுக்கு துபாய் மதிப்பில் 200 திர்ஹாம், (அதாவது இந்திய மதிப்பில் Rs 3,950) கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்த விளம்பரத்தை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர், அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

துபாயில் உள்ள Al Refaa என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அவரை வருமாறு எதிர் முனையில் கூறியிருக்கின்றனர். அதனையடுத்து அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போது 4 ஆப்பிரிக்க பெண்மணிகள் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் இளைஞரின் மொபைல் போனில் உள்ள வங்கி அப்ளிகேஷனை திறக்குமாறு கூறியுள்ளனர்.

கத்தியை அவரின் கழுத்தில் வைத்து அழுத்தியும், கன்னத்தில் அறைந்தும் அவரை வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளனர். அதே நேரத்தில் மற்றொரு பெண் அவரின் கிரெடிட் கார்டை எடுத்து அதில் இருந்த 30,000 திர்ஹாம் பணத்தை எடுத்துள்ளார். (இது இந்திய மதிப்பில் 5,92,586 லட்சம் ரூபாயாகும்).

ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞரை அந்த வீட்டிலேயே அப்பெண்கள் சிறை வைத்துள்ளனர். பின்னர் அவரை மிரட்டி 250,000 திர்ஹாம் பணத்தை அவர்களின் பல்வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதன் இந்திய மதிப்பு 49,38,219 லட்ச ரூபாயாகும். பின்னர் அவரின் ஐபோனையும் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து துரத்தியுள்ளனர். இதன் பின்னர் அந்த இளைஞர் தனது வங்கியை தொடர்பு கொண்டு தன் கணக்கில் இருந்து முறைகேடாக பணம் அனுப்பப்பட்டது குறித்து கூறியுள்ளார். அதே நேரத்தில் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இளைஞரின் புகாரின் அடிப்படையில் அவரை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 3 பெண்கள் ஷார்ஜாவில் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்.

இந்திய இளைஞர் துபாயில் ஏமாற்றப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Published by:Arun
First published: