காதலியின் பிணத்தோடு ஊர் முழுக்க சுற்றிய காதலன்! துபாயில் கொடூரம்!

காதலியை கொலை செய்து தனது வாகனத்தின் பின் சீட்டில் அவரது உடலை வைத்து நகர் முழுவதும் செய்வதறியாது 45 நிமிடங்கள் சுற்றியுள்ளார்.

காதலியின் பிணத்தோடு ஊர் முழுக்க சுற்றிய காதலன்! துபாயில் கொடூரம்!
காதலியை கொலை செய்து தனது வாகனத்தின் பின் சீட்டில் அவரது உடலை வைத்து நகர் முழுவதும் செய்வதறியாது 45 நிமிடங்கள் சுற்றியுள்ளார்.
  • Share this:
துபாயில் காதலியை கொன்று உடலோடு நகரின் பல இடங்களில் சுற்றிய இந்தியரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் 27 வயதான இந்தியர் ஒருவர், அங்கு வசித்த இந்திய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தீடீரென காதலித்த பெண் காதலனை ஏமாற்றி விட்டு வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

Also read : பப்ளிசிட்டிக்காக தாறுமாறு பதிவுகள்... அவதூறு புகைப்படத்தால் கம்பி எண்ணும் அவலம்...!


இதனால் ஆத்திரம் அடைந்த காதலர் பெண்ணை கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த காதலர் கத்தியை எடுத்து காதலியை கொலை செய்து தனது வாகனத்தின் பின் சீட்டில் அவரது உடலை வைத்து நகர் முழுவதும் செய்வதறியாது 45 நிமிடங்கள் சுற்றியுள்ளார்.

பின்னர் முரகாபாத் காவல் நிலையத்தில் தனது காரை நிறுத்தி அங்குள்ள போலீசாரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு துபாய் நீதி மன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகின்றது.

திட்டமிட்டு பெண்ணை கொலை செய்த நோக்கில் அரசு தரப்பில் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading