லாட்டரியில் ரூ.27.6 கோடி பரிசு...! போனை எடுக்காததால் கோடீஸ்வரர் ஆனது தெரியாமல் இருக்கும் இந்தியர்

அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி பரிசு வெல்வது வாடிக்கையான ஒன்று.

Web Desk | news18
Updated: May 4, 2019, 9:19 PM IST
லாட்டரியில் ரூ.27.6 கோடி பரிசு...! போனை எடுக்காததால் கோடீஸ்வரர் ஆனது தெரியாமல் இருக்கும் இந்தியர்
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: May 4, 2019, 9:19 PM IST
துபாய் லாட்டரியில் இந்தியர் ஒருவருக்கு ரூ.27.6 கோடி பரிசாக விழுந்துள்ளது. எனினும், லாட்டரி குலுக்கல் நடத்திய நிறுவனம் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட போதும் அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டப்பூர்வமாக லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. இதில், இந்தியர்கள் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி பரிசு வெல்வது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில், ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான ஷோஜித், அபுதாபி டியூட்டி பிரீ பிக் டிக்கெட் லாட்டரி (வரியில்லா லாட்டரி) வரிசை குலுக்கலில் 15 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார். இந்திய மதிப்பில், இது ரூ.27.6 கோடி ஆகும்

இதையும் படிங்க... துபாய் லாட்டரியில் ரூ.7 கோடி வென்ற 9 வயது இந்தியச் சிறுமி!

இதில் வேடிக்கை என்னவென்றால், லாட்டரியில் பணம் ஜெயித்தது ஷோஜித்துக்கு இன்னமும் தெரியாது. செல்போனில் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

‘தொடர்ந்து முயற்சி செய்வோம். அப்படியும் அவர் கிடைக்கவில்லை என்றால், ஷார்ஜாவில் அவர் எங்கே வசிக்கிறார் என்பது தெரியும், அவரது வீட்டுக்கே செல்வோம்” என்று லாட்டரி சீட்டு நிர்வாகி கூறியுள்ளார்.

இது தவிர, இந்தப் பரிசு சீ்ட்டு குலுக்கலில், இன்னொரு இந்தியரான மங்கேஷ் மைந்தே பிஎம்டபிள்யூ 220i ரக சொகுசு கார் ஒன்றை பரிசாக வென்றிருக்கிறார்.
Loading...
First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...