உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தலை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை விரைவு படுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் 4 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
உக்ரைனில் வான்வெளி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து தரைமார்க்கமாக அண்டை நாடுகளான போலந்து மற்றும் ரோமேனியாவுக்கு இந்தியர்கள் வருகின்றனர். அங்கிருந்து வான்வெளியில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலரும் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கு விரைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க -
ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் தற்போது, உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக புதிய அறிவுறுத்தலை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
உக்ரைன் தலைநகர் கீவில் வார இறுதிநாள் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து உக்ரைனின் மேற்கு பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க -
உக்ரைன் நாட்டு ‘அஞ்சா நெஞ்சர்’... நாடக நடிகர் டூ அதிபர்: யார் இந்த ஜெலன்ஸ்கி?
அமைதியாகவும், ஒற்றுமையுடனும் இந்திய குடிமக்கள், மாணவர்கள் செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் அதிக கூட்டம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்தியர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
ரயில்கள் தாமதம் ஆகவும் வாய்ப்புள்ளது. அதிக கூட்டம் இருப்பின் ரத்து செய்யவும் நேரிடலாம். எனவே இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும். கையில் பாஸ்போர்ட், போதுமான பணம், சாப்பிடுவதற்கு உணவு, குளிரைத் தாங்கும் உடை மற்றும் அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும்.
இந்தியர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு உக்ரைன் மக்கள் போதுமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழலில் அவர்களின் உணர்வுகளுக்கு இந்தியர்களாகிய நாம் மதிப்பளித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.