இலங்கை அருகே எரிந்த எண்ணெய் கப்பலின் ஓட்டைகள் முழுமையாக அடைக்கப்பட்டது: இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல்..

இலங்கை அருகே பழுதாகி நடுக்கடலில் எரிந்து வந்த எண்ணெய் கப்பலில் ஓட்டைகள் அடைக்கப்பட்டு, இழுத்துச்செல்ல தயாராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே எரிந்த எண்ணெய் கப்பலின் ஓட்டைகள் முழுமையாக அடைக்கப்பட்டது: இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல்..
இலங்கை அருகே எரிந்த எண்ணெய் கப்பல்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 12:14 PM IST
  • Share this:
பனாமா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் MT new diamond என்ற சரக்குக் கப்பலை நிர்வகித்து வந்தது. இந்த கப்பல் செப்டம்பர் 5ம் தேதியன்று பாரதீப் துறைமுகத்துக்கு குவைத்தில் இருந்து 2 லட்சத்து 70,000 டன் கச்சா எண்ணெயை டெலிவரி செய்வதாக இருந்தது. ஆனால் கப்பல் இலங்கைக்கு அருகே வந்தபோது, இன்ஜினில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பலில் 23 மாலுமிகள் இருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போனார். 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில் கப்பல் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த நிலையில், இந்தியா, இலங்கை கடற்படையின் கூட்டு முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இலங்கை கடற்கரையில் இருந்து 76 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. தீவிபத்தால் சேதமடைந்த இன்ஜின் அறை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட ஓட்டைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏதும் ஏற்படாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் இருப்பதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க...உலகளவில் 2.92 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..இந்நிலையில் கடலில் நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை பாதுகாப்பான முறையில் Tug boka என்ற இழுவைக் கப்பலின் உதவியுடன் இழுத்துச் செல்ல உள்ளதாக இந்திய கப்பற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading