இந்திய ராணுவம் வெளியிட்டது பனி மனிதனின் கால்தடம் இல்லை - நேபாள் விளக்கம்

நேபாளத்தை ஒட்டிய பனிக்காடுகளில் இவ்வகை உயிரினம் வசிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

news18
Updated: May 2, 2019, 12:59 PM IST
இந்திய ராணுவம் வெளியிட்டது பனி மனிதனின் கால்தடம் இல்லை - நேபாள் விளக்கம்
மாதிரிப்படம்
news18
Updated: May 2, 2019, 12:59 PM IST
இமய மலைக் காடுகளில் இந்திய ராணுவம் கண்டது பனிமனிதனின் கால்தடம் இல்லை. பனிக்கரடியின் கால்தடம் என்றும் நேபாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இமய மலைக் காடுகளில் வசிப்பதாக நம்பப்படும் பனி மனிதனின் காலடித்தடம் ஒன்றை கண்டதாக இந்திய ராணுவம் புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்திருந்தது.

இதை ஆய்வு செய்வதற்காக நேபாளிலிருந்து இமைய மலைக்கு அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இந்திய ராணுவத்துடன் இணைந்து அந்த கால் தடத்தை ஆய்வு செய்ததில் அது பனிமனிதனின் கால்தடம் இல்லை. கரடியின் கால்தடம் என்று தெரியவந்ததாகவும் நேபாள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட விலங்கினமாகக் குறிப்பிடப்படும் பனி மனிதன் (yeti) பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இமயமலைக்காடுகளில் இவ்வகை பனி மனிதர்கள் வசித்து வருவதாக நம்பப்படுகிறது.

நேபாளத்தை ஒட்டிய பனிக்காடுகளில் இவ்வகை உயிரினம் வசிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும், தற்காலத்தில் அவர்கள் வசிப்பது சாத்தியமில்லை. முந்தைய காலங்களில் அப்படி இருந்தவர்கள் காலநிலை சூழல் மாற்றத்தால் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஒருசாரர் கூறிவருகின்றனர்.

இந்திய ராணுவத்தின் ஒரு ட்வீட்டால் மேற்கண்ட விவாதங்கள் மீண்டும் தொடங்கியது.

இதற்கு முன்னதாக மாகலு - பரூண் தேசிய பூங்கா அருகே இதேபோன்ற பனி மனிதர்கள் பார்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. சராசரி மனிதனை விட அதிக உயரம் கொண்ட இந்த பனி மனிதன் இமயமலை தவிர அமெரிக்கா, சைபீரியா ஆகிய பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
Loading...
மேலும் பார்க்க:
First published: May 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...