முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர்... அதிபர் ஜோபைடன் பாராட்டு....

அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர்... அதிபர் ஜோபைடன் பாராட்டு....

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்காவை இந்திய வம்சாவளியினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் என்ற ரோவர், கடந்த மாதம் 18-ம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இந்த சாதனையை நிகழ்த்திய நாசா விஞ்ஞானிகளுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பெர்சவரன்ஸை தரையிறக்கும் குழுவுக்கு இந்திய அமெரிக்கரான ஸ்வாதி மோகன் தலைமை வகித்தார். இதனால், தங்களை அழைத்துப் பேசியதற்காக அதிபருக்கு ஸ்வாதி மோகன் நன்றி தெரிவித்தார்.

அப்போது, தன்னுடன் விளையாடுகிறீர்களா என்று நகைச்சுவையாக கூறிய பைடன், இது எவ்வளவு பெரிய பெருமை என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்காவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அவர் கூறினார். தனது துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனக்கான உரையை எழுதிக் கொடுக்கும் வினய் ரெட்டி என ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் தனது நிர்வாகத்தில் இருப்பதாக பைடன் கூறினார்.

அமெரிக்க மக்கள் மத்தியில் தாங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளதாகவும், நம்மைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவதாகவும், இதனை சாதித்துக் காட்டியுள்ளீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்வாதி மோகனின் பெயரை குறிப்பிடாமல் பேசிய பைடன், பல்வேறு வேற்றுமை கொண்ட நாடாக இருப்பதால்தான், மிகச்சிறந்த நாடாக அமெரிக்காவில் இருக்க முடிவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்க...மியான்மரில் 54 பேர் சுட்டுக் கொலை: ஐ.நா கண்டனம்

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்ற பைடன், இதுவரை தனது நிர்வாகத்தின் உயர் பொறுப்புகளில் 55 இந்திய-அமெரிக்கர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: America, INDIAN, Joe biden