மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக சுமார் 3.3 மில்லியன் டாலர் சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் நீதித்துறையின் வெளியீட்டின்படி, கலிபோர்னியாவின் சான் டியாகோவைச் சேர்ந்த 55 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். லோகேஷ் எஸ். தந்துவாயா, லாங் பீச்சில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் பெற்றுள்ளார்.
கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், லாங் பீச்சில் உள்ள மைக்கேல் ட்ரோபோட்டுக்கு சொந்தமான பசிபிக் மருத்துவமனையில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்யம் பணியை செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: பருவநிலை மாற்றங்களால் 30 நாடுகளில் காலரா பரவல் - உலக சுகாதார அமைப்பு அலெர்ட்
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்கு ஈடான தொகையை அறுவை சிகிச்சை செய்யும் தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என்று முறையிட்டுள்ளார். அப்படி 3 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவமனை உரிமையாளர் மைக்கேல் ட்ரோபாட் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு 63 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் மருத்துவர் லோகேஷ் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bribe, Crime News, Doctor