அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லாலை நியமனம் செய்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை பிரிவில் வெள்ளை மாளிகை அலுவலகத்துக்கு பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிபர் மாற்றத்தின்போதான மதிப்பீட்டுக் குழுவில் பணிபுரிந்த அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு காலத்தின்போது மதிப்பீட்டுக் குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2005-ஆம் ஆண்டு முதல் 2020 வரை STPI எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவில் மிகுந்த அனுபவம் பெற்றவர்.
நியூக்லியர் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற பவ்யா லால், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். நியூக்லியர் தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை சமூகத்தின் மிக முக்கிய உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.