ஆப்கானிஸ்தானில் இருந்த இந்திய அதிகாரிகள் 120 பேருடன் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் காபூலில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டு குடிமக்கள், அங்கு தங்கியிருந்த வெளிநாட்டினர் ஆகியோர் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர். தங்கள் நாட்டு குடிமக்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை பத்திரமாக மீட்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழலை அடுத்து அங்கு இருந்த இந்திய அதிகாரிகள் விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், 120க்கும் மேற்பட்ட இந்திய அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப் படைக்கு சொந்தமான C-17 விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.
இதையும் படிங்க: உலகின் பல்வேறு சாம்ராஜ்யங்களாலும் சாய்க்க முடியாத ஆப்கானிஸ்தான்
முக்கிய ஆவணங்கள், இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு காபூலில் உள்ள ஹமித் கார்சை விமான நிலையத்தில் இருந்து ஐ.ஏ.ஃப். விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: புத்தம் புது ஆயுதங்கள் - தாலிபன்களுக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது?
இதேபோல், ஞாயிறன்று காபூலில் இருந்து புறப்பட்ட இந்திய விமான படைக்கு சொந்தமான மற்றொரு விமானம் ஈரான் வான்வழியாக இந்தியா வந்தடைந்ததாக வும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை உற்று நோக்கி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது இந்தியாவின் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, India, Taliban