Home /News /international /

உக்ரைன் விவகாரம்.. முதல்முறையாக ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

உக்ரைன் விவகாரம்.. முதல்முறையாக ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா

ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா

பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபரை உரையாற்ற அழைப்பதை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaGenevaGeneva
    ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் முதல் முறையாக இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளது.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24 உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். ரஷ்யாவின் இந்த திடீர் போர் தாக்குதல் ஆறு மாதங்கள் கடந்தும் ஓயாமல் நீடித்து வருகிறது. இந்த போர் அந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையே சலசலக்க வைத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. சீனா ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், இந்தியா இவ்விகாரத்தில் இரு நாடுகளுக்கும் தனிப்பட்ட ஆதரவு எதிர்ப்பு என்று இல்லாமல், நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.

    இந்த போருக்குப் பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த தீர்மானங்களில் ரஷ்யாவை எதிர்த்து வாக்களிக்காமல் இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இந்நிலையில், ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முதல் முறையாக உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கியை வீடியோ டெலி கான்பரென்ஸ் மூலம் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வைரலான டான்ஸ் வீடியோ.. போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? ஆய்வில் தெரியவந்த தகவல்

    உக்ரைன் அதிபரை உரையாற்ற அழைப்பதை ஏற்க முடியாது என்று அழைப்பை எதிர்த்து ரஷ்யா ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. ரஷ்யாவின் இந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதேவேளை, சீனா இந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்தது. போர் விவகாரத்தை பொறுத்த வரை ரஷ்யாவை இந்தியா இதுவரை விமர்சித்து கருத்து தெரிவிக்கவில்லை. அதேவேளை, இரு தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் அமைதி காண வேண்டும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: India, Russia - Ukraine, United Nation

    அடுத்த செய்தி