முதன் முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!

பிரதமர் மோடி பிரதமரானதும் இதற்கு முன் இல்லாத வகையில், இந்தியா - இஸ்ரேல் உடனான நெருக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: June 13, 2019, 6:26 AM IST
முதன் முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!
மாதிரி படம்
news18
Updated: June 13, 2019, 6:26 AM IST
ஐநா நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற அமைப்பை ஐ.நாவில் சேர்ப்பதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஷாகீத் அமைப்பை உறுப்பினராக்கலாமா? கூடாதா? என்ற வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

கடந்த 6-ம் தேதியே, ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு வாக்களித்தமைக்கு நன்றி என இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் ட்விட்டரில் பதிவிட்ட பிறகுதான் இந்த ஆதரவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீனுக்கும் சாதக பாதகமாக இல்லாமல் நடுநிலைமையாக இந்தியா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த போது, அந்நாட்டை எதிர்த்து மற்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்து இருந்தது.

பிரதமர் மோடி பிரதமரானதும் இதற்கு முன் இல்லாத வகையில், இந்தியா - இஸ்ரேல் உடனான நெருக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...