அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போரைத் தொடர்ந்து, சீனா தரப்பில் பாதிக்கப்பட்ட 180 பொருட்களை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வர்த்தகரீதியான போக்கு சரியில்லை எனக் கூறி, தங்களது நாட்டுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களில், 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானவற்றுக்கு அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. அதைத் தொடர்ந்து, சீனாவும் பதிலுக்கு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் மீது 25 சதவீதம் வரி விதித்தது.
இதுபோல் அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்த இந்தியா முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 6000 பொருட்கள், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு வலைக்குள் வந்துள்ளது. அவற்றில், தீவிர ஆய்வு மேற்கொண்டு, மோட்டார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட 180 வகையான பொருட்களை, அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.
அதன் மூலம், 8 முதல் 10 பில்லியன் டாலர் வரையிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைக்கும். இதேபோல, சீனாவுக்கும், வாகனம், இரும்பு மற்றும் உருக்கு போன்றவற்றை இந்தியாவால் ஏற்றுமதி செய்யமுடியும். மேலும் இந்தியாவின் புதிய திட்டம் தொடர்பாக, அமெரிக்காவின், பரம எதிரியும், சீனாவிடம் அண்மைக்காலமாக அதிக நெருக்கம் காட்டும் ரஷ்யாவின் ஊடகமான ரஷ்யா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், தங்களிடமிருந்து போதுமான அளவு இறக்குமதி செய்வதில்லை என்று இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு கூறி வருவதால், இந்தியாவின் புது முயற்சியை அமெரிக்கா ஏற்பதில் சிக்கல் இருப்பதையும் ரஷ்ய பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, China, India, Russia, Trade ware