• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு!

அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு!

பாகிஸ்தானால் இந்தியாவின் அமைதிக்கு ஆபத்து என டிரம்ப்பிடம் பிரதமர் மோடி புகார்

பாகிஸ்தானால் இந்தியாவின் அமைதிக்கு ஆபத்து என டிரம்ப்பிடம் பிரதமர் மோடி புகார்

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் அணுஉலைகள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட எந்த கூடுதல் தகவலும் இடம்பெறவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் 6 அணுமின் நிலையங்களை அமெரிக்கா அமைப்பது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

மத்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, விஜய் கோகலே மற்றும் அமெரிக்க துணை அமைச்சர் ஆண்டிரியா தாம்சன் ஆகியோர் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வாஷிங்டனில் 2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 6 அணு உலைகளை அமெரிக்கா அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தியாவில் அமெரிக்காவின் அணுஉலைகளை அமைப்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எந்தெந்த பகுதிகளில் அணுஉலைகள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட எந்த கூடுதல் தகவலும் இடம்பெறவில்லை.

Also see... பொள்ளாச்சியில் மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: