ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தியாவில் 2 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறித்த காற்றுமாசு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 2 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறித்த காற்றுமாசு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

காற்று மாசு- இறந்த குழந்தைகள்

காற்று மாசு- இறந்த குழந்தைகள்

ஒவ்வொரு 10 μg/m3 PM2.5 அதிகரிப்பும் சுமார் 11.0% கருவில் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாகின்றன என்று ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஐக்கிய நாடுகள் சபையானது (UN) இறந்து பிறப்புகளின் உலகளாவிய எண்ணிக்கையை ஒரு புறக்கணிக்கப்பட்ட சோகம் என்று அழைக்கிறது.UN இன்டர்-ஏஜென்சி குரூப் (UN IGME) 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 2.0 மில்லியன் குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது.

அதேநேரத்தில் அதிக இறந்த நிலை குழந்தைகள் பிறக்கும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (LMICs). 98% இறந்த நிலை குழந்தை பிரசவங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது உலக சுகாதார நிலையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

காற்றில் உள்ள மாசுகளை பலவகையாக பிரிப்பர். அதில் ஒன்று பார்டிகுலர் மேட்டர் 2.5 - காற்றில் 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதைவிட சிறிய திட அல்லது திரவ பொருள் கலந்திருப்பதைக் குறிக்கும். இது காற்றில் குறிப்பிட்ட அளவு வரை இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெண்களே உஷார்.! சானிட்டரி நாப்கினால் புற்றுநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

அதை விட அதிக அளவில் இருந்தால் அதை சுவாசிக்கும் மனிதனுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். நுரையீரல் பிரச்சனை, தோல் பிரச்சனை உள்ளிட்டவை ஏற்படுவது இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது கருவில் உள்ள குழந்தையும் பெரிதும் பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

கர்ப்ப இழப்பின் அனைத்து துணை வகைகளைக் காட்டிலும், PM2.5 வெளிப்பாடு மிகவும் வலுவாக தொடர்புடையதை கண்டறிந்துள்ளனர். WHO குறிப்பிட்ட அளவை விட அதிகம் வெளிப்படும் PM2.5 ஆல் சுமார் 82.90% கர்ப்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு 10 μg/m3 PM2.5 அதிகரிப்பும் சுமார் 11.0% கருவில் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாகின்றன என்று ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன. 1998 முதல் 2016 வரையான 465000 இறந்த குழந்தைகளின் தன்மையை ஆராய்ச்சி செய்தனர்.

.

PM2.5 வெளிப்பாடு மற்றும் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை வைத்து ஒரு வரைபடம் உருவாக்கப்பட்டது. அதன்படி அதிக வெளிப்பாடு மற்றும் அடிப்படை பிரசவ விகிதம் காரணமாக தெற்காசியா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய பாலைவனம் ஆகியவை PM2.5 தொடர்பான பிரசவத்தின் ஹாட்ஸ்பாட்களாக இருந்தன.

இதையும் படிங்க: 'அதிக தொழிற்சாலைகள்'.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கை

எண்ணிக்கை அளவில் இந்தியா PM2.5 வெளிப்பாடு காரணமாக சுமார் 2 லட்சம் இறந்து பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. அதை தொடர்ந்து 1.1 லட்சம் இறப்புகளுடன் பாகிஸ்தான், 93 ஆயிரம் இறப்புகளுடன் நைஜீரியா இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

அதேபோல் மொத்த இறப்புகளில் PM2.5 வெளிப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதாச்சார அடிப்படையில் 71% மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்பை பதிவு செய்து கத்தார் முதல் இடத்திலும், சவுதி மற்றும் குவைத் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

PM2.5 வெளிப்பாடு பிறக்காத குழந்தைகளை பாதிக்கும் நிலை உலக சுகாதார நிலைக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கும் இடத்தை எட்டியுள்ளது. நாடுகள் குறிப்பாக தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இதில் கவனம் செலுத்த இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

First published:

Tags: Air pollution, Baby