முகப்பு /செய்தி /உலகம் / நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி... மீட்பு படை அனுப்பி வைக்கும் இந்தியா!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி... மீட்பு படை அனுப்பி வைக்கும் இந்தியா!

தேசிய பேரிடர் மீட்பு படை (கோப்பு படம்)

தேசிய பேரிடர் மீட்பு படை (கோப்பு படம்)

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 100 வீரர்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaTurkeyTurkey

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இந்திய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு, ஏராளமானோர் உயிரிழந்தனர். அத்துடன், இரு நாடுகளிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் துருக்கிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 100 வீரர்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிவதற்காக, பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும் மருத்துவ குழு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் துருக்கியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: National Disaster Management, Turkey, Turkey Earthquake