ஓமன் - இந்தியா இடையே 8 ஒப்பந்தங்கள்

news18
Updated: February 12, 2018, 1:15 PM IST
ஓமன் - இந்தியா இடையே 8 ஒப்பந்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடி
news18
Updated: February 12, 2018, 1:15 PM IST
ஓமன் - இந்தியா இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இருநாடுகள் வளர்ச்சியிலும் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

4 நாள் அரசுமுறைப் பயணமாக, மேற்காசிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தீனம், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக, ஓமன் நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாடுகளுக்கு இடையே மொத்தம் எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன்படி, உரிமையியல், வர்த்தகம், நீதித்துறைச் சார்ந்த இருநாட்டு கூட்டுறவு, பல்வேறு வகையான விசா வைத்திருப்போருக்கான சிறப்புச் சலுகைகள் அளித்தல்  தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதேபோல், சுகாதாரத்துறையிலும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாகவும்  இரு நாடுகள் பரஸ்பரம் தங்கள் பங்களிப்பை அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு, ராணுவ கூட்டுறவு உள்ளிட்டவற்றிலும் இரு நாடுகள் ,இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த நிலையில், தனது நான்கு நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி, இன்று நாடு திரும்புகிறார்.
First published: February 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்