Home /News /international /

''ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு நடுக்கம் '' : ஜோ பைடன் விமர்சனம்

''ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு நடுக்கம் '' : ஜோ பைடன் விமர்சனம்

ஜோ பைடன்

ஜோ பைடன்

Joe Biden on India: ''ரஷ்யாவை ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் வலுவாக எதிர்க்கின்றன'' - ஜோ பைடன்

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கு எதிரான கூட்டணியில் இந்தியா இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அவரது கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அணிசேராக் கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருகிறது. உக்ரைனை ரஷ்யா கடுமையாக தாக்கி வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன.

இதையும் படிங்க - ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை: ரஷ்ய அதிபர் புதின் மீது உக்ரைன் குற்றச்சாட்டு
இவற்றை சுட்டிக் காட்டி அமெரிக்காவில் வணிக தலைவர்களிடையே உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், 'குவாட் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியா சற்று நடுக்கம் காண்கிறது. ரஷ்யாவை ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் வலுவாக எதிர்க்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியில் இந்தியா இடம்பெறவில்லை.' என்று கூறினார்.


இதையும் படிங்க - சரணடையும் பேச்சுக்கே இடமில்லை - உக்ரைன் திட்டவட்டம்

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த முயன்றாலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதாக கூறப்படுகிறது.

உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருந்து வருகிறது. மொத்த தேவைகளில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது. இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

உக்ரைன் பிரச்னைக்கு பின்னர் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கூடுதல் எரிபொருளை வாங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி