ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை அள்ளி வீசும் இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை அள்ளி வீசும் இந்தியா!

மருத்துவ உதவி

மருத்துவ உதவி

உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் மற்றும் வளரும் நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பரிசளித்து வழங்குவதற்கான இராஜதந்திர நடவடிக்கையான அரசாங்கத்தின் தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ் Covaxin டோஸ் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக நேற்று 5 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.

பொருளாதார பாதிப்பில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைகளுக்கு சென்ற பின்னர் மேலும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.  நெருக்கடியை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு வகையாக உதவி வருகிறது.  கடந்த டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில்  1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானத்துக்கு 10 லட்சம் கொரானா வைரஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று இந்தியத் தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக நேற்று 5 லட்சம் கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனுடன் கோதுமையும் இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் மற்றும் வளரும் நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பரிசளித்து வழங்குவதற்கான இராஜதந்திர நடவடிக்கையான அரசாங்கத்தின் தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ் Covaxin டோஸ் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசியின் 4-வது டோஸை செலுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு இஸ்ரேல் அனுமதி

பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், பூட்டான், மொரிஷியஸ், இலங்கை, மாலத்தீவுகள், பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, DR காங்கோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவர்.

First published:

Tags: Afghanistan, Corona Vaccine, India