கோத்தபய ராஜபக்ச தப்ப இந்தியா உதவியதா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய தூதரகம்
கோத்தபய ராஜபக்ச தப்ப இந்தியா உதவியதா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய தூதரகம்
கோத்தபய ராஜபக்ச (கோப்பு படம்)
Gotabaya Rajapaksa : இலங்கையில் இருந்து கோத்தபய ராஜபக்ச வெளியேற இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நிதி சிக்கலில் தவித்து வருகிறது. உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அவர் அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தை தவறவிட்ட கோத்தபய ராஜபக்ச தனியார் ஜெட் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்ச தப்பிச் செல்வதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை மத்திய அரசானது திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக கொலும்புவில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது.
அந்தப்பதிபில், இலங்கையில் இருந்து கோத்தபய ராஜபக்ச வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இது ஆதாரமற்றது, ஊகத்தின் அடிப்படையிலானது" என தெரிவித்துள்ளது.
High Commission categorically denies baseless and speculative media reports that India facilitated the recent reported travel of @gotabayar@Realbrajapaksa out of Sri Lanka. It is reiterated that India will continue to support the people of Sri Lanka (1/2)
மேலும், "இலங்கையில் ஜனநாயக அமைப்புகள், அரசியல் சாசன கட்டமைப்புகள் வழியாக முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு அந்த நாட்டு மக்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும்" எனவும் கூறப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.