ஹோம் /நியூஸ் /உலகம் /

முதல் ’ராணி எலிசபெத் II’ விருதை வென்ற இந்திய வம்சாவளி அமைச்சர்!

முதல் ’ராணி எலிசபெத் II’ விருதை வென்ற இந்திய வம்சாவளி அமைச்சர்!

இந்திய வம்சாவளி அமைச்சர்

இந்திய வம்சாவளி அமைச்சர்

இனம், பின்புலம், குடும்பம் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனி நபர்களின் சாதனைகளையும் சேவைகளையும் மட்டுமே கணக்கில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், முதல் ராணி எலிசபெத் II சிறந்த பெண் விருதை வென்றுள்ளார். வெள்ளிக்கிழமை லண்டனில் நடந்த விழாவில், 42 வயதான இந்திய வம்சாவளி அமைச்சரின் பெற்றோர் அவரது சார்பாக விருதை பெற்றுக்கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் இங்கே ஆட்சி செய்த போதும் அதற்கு பின்னரும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்த மக்கள் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். இன்று இங்கிலாந்தில், இந்தியர்கள் உட்பட தெற்காசியர்கள் பலர் அரசியல், வணிகம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிர்வாகப் பணிகளையும், பதவிகளையும் வகித்து வருகின்றனர்.

2000 ஆம் ஆண்டு ஆசிய சாதனையாளர் விருதுகள் என்பது நிறுவப்பட்டது. இதன்மூலம் தெற்காசிய மக்களின் பெரும் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டுள்ளன. இனம், பின்புலம், குடும்பம் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனி நபர்களின் சாதனைகளையும் சேவைகளையும் மட்டுமே கணக்கில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

சாந்தனு நாராயண் முதல் லக்ஷ்மன் நரசிம்மன் வரை..உலகின் டாப் நிறுவனங்களில் CEO-ஆக இருக்கும் இந்திய வம்சாவளிகளின் லிஸ்ட்!

"நமது ராணி எலிசபெத் II வுமன் ஆஃப் தி இயர் - சிறந்த பெண் விருதை வென்றவர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் புதிய உள்துறை செயலாளர் ஆன சுயெல்லா பிரேவர்மேன். அவரது அன்பான பெற்றோர் உமா மற்றும் கிறிஸ்  #20YearsOfAAA இன் விருதை பெற்றுக்கொண்டனர்" என்று ஆசிய சாதனையாளர் விருது ட்வீட் செய்தது.

"இந்த விருதைப் பெறுவதில் பெருமை அடைகிறேன். மிக்க நன்றி. இனம், பின்புலம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சாதிப்பதற்கு இதுவே உலகின் மிகச் சிறந்த நாடு. ஒவ்வொருவரும் தங்கள் திறனை உணர்ந்துகொள்ள உறுதுணையாகச் செயல்படுவோம்." என்று சுயெல்லா பிரேவர்மேன் ட்வீட் செய்துள்ளார்

கடந்து வந்த பாதை:

  • மே 2015 இல் ஃபேர்ஹாமின் கன்சர்வேட்டிவ் எம்பியாக சுயெல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2018 ஜனவரி முதல் நவம்பர் வரை ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் துறையின் நாடாளுமன்ற துணை செயலாளராக இருந்தார்.
  • 2020-2022 இல் சுயெல்லா பிரேவர்மேன் இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார்.
  • இந்த ஆண்டு, ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் தனது உள்துறை செயலாளராக சுயெல்லா பிராவர்மனை நியமித்திருந்தார்

Published by:Ilakkiya GP
First published:

Tags: London, Queen Elizabeth, Women achievers