Home /News /international /

யூடியூப் பார்த்து விமானத்தை உருவாக்கி வியப்பில் ஆழ்த்திய இந்திய வம்சாவளி குடும்பத்தினர்

யூடியூப் பார்த்து விமானத்தை உருவாக்கி வியப்பில் ஆழ்த்திய இந்திய வம்சாவளி குடும்பத்தினர்

Plane

Plane

விமானத்தை உருவாக்க 1.4 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாகவும், சுமார் 3,600 மணி நேரங்கள் இதை கட்டமைக்க செலவிட்டிருப்பதாகவும் அசோக் தெரிவித்தார்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பத்தினர் யூடியூப் வீடியோ பார்த்து இரண்டு ஆண்டுகளில் விமானம் ஒன்றை உருவாக்கி வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

    கோவிட்-19 தொற்றுநோய் நமது வாழ்க்கையை பல நிலைகளில் மாற்றியமைத்துள்ளது. முழு முடக்கம் அமலாகியிருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மில் பெரும்பாலானவர்கள், யூடியூப் அல்லது ஓடிடி தளங்களில் வெப் சீரீஸ், திரைப்படங்கள் பார்த்தோ நேரத்தை கழித்திருப்போம். ஆனால் மிகச் சிலரே இந்த நேரத்தை பயனுள்ளதாக கழித்திருக்கக் கூடும். சிலர் புதிய மொழிகளை கற்றிருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் பயனுள்ளவைகளை செய்திருக்கக் கூடும். இதே போல ஒரு நபர் இந்த பொதுமுடக்க காலத்தில் யூடியூப் பார்த்தே ஒரு முழு விமானத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை கேட்கவே வியப்பாக இருக்கிறதல்லவா? இது முற்றிலும் உண்மை தான்.

    இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் கவுண்டி மாகாணத்தின் Billericay பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதாகும் அசோக் அலிசெரில். இந்திய வம்சாவளியினரான இவர் மனைவி அபிலாஷா துபே (வயது 35), மகள்கள் தாரா (6), தியா (3) ஆகியோருடன் அங்கு வசித்து வருகிறார்.

    Also read:  கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பேட் நியூஸ்

    அசோக்கின் குடும்பத்தினருக்கு விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதே நேரத்தில் அசோக்கின் பட்ஜெட்டில் ஒரு விமானத்தை அவரால் வாங்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில் தான் தென் ஆப்பிரிக்காவில் விமான பாகங்களை வாங்கி வந்து இங்கிலாந்தில் அசெம்பிள் செய்யலாம் எனவும் இது அவருடைய பட்ஜெட்டில் சாத்தியமாகும் என தெரியவந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்று அவர் ஆர்டர் கொடுத்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். விமான பாகங்கள் கடந்த 2020 மார்ச் மாதம் அசோக்கின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் கொரோனா முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

    Also read: ரஷ்யாவுக்கு ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல்

    இருப்பினும், தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள கேரஜில் வைத்து விமானத்தை கட்டமைக்க அசோக் விரும்பினார். விமான பொறியாளரான அசோக், கற்றல் கையேடு மற்றும் யூடியூப் வீடியோக்கள் பார்த்து அதன் மூலம் விமானத்தை உருவாக்க திட்டமிட்டார். அவரின் விருப்பத்தை ஏற்று அவரின் மனைவியும், மகள்களும் அவருக்கு உதவ, இரண்டு ஆண்டுகால கடின உழைப்பின் பலனாக தற்போது 4 பேர் அமரக் கூடிய முழு விமானத்தை கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார் அசோக்.

    Also  read:  மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்

    விமானத்தை உருவாக்க 1.4 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாகவும், சுமார் 3,600 மணி நேரங்கள் இதை கட்டமைக்க செலவிட்டிருப்பதாகவும் அசோக் தெரிவித்தார். தனது வேலை நேரம் போக எஞ்சிய நேரங்களில் தோட்டத்தில் இருக்கும் கேரஜில் விமானத்தை உருவாக்கி வந்ததாகவும். விமானத்திற்காக தங்களின் செலவுகளை கட்டுப்படுத்தி சேமித்து வந்ததாகவும் அவர் கூறினார். விரைவில் இந்த விமானத்தின் மூலம் அசோக்கின் குடும்பத்தினர் சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். விமானத்தை பறக்க வைக்க ஆவலாக இருப்பதாகவும் அசோக் குறிப்பிட்டார்.
    Published by:Arun
    First published:

    Tags: Plane, Youtube

    அடுத்த செய்தி