73 ஆண்டுகளில் இல்லாத பலம் வாய்ந்த இந்திய அரசு தற்போது உள்ளது: பாக். பிரதமர் இம்ரான் கான்
இந்தியாவில் கடந்த 73 ஆண்டுகளாக இப்போது உள்ள அரசு போல் அமையவில்லை. தற்போது பலம் வாய்ந்த அரசின் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது.

இம்ரான் கான் -பாகிஸ்தான் பிரதமர்
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 8:43 AM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வலம் வந்தது. இதில் இம்ரான் கான், 73 ஆண்டுகளாக இல்லாத பலம் வாய்ந்த இந்திய அரசு தற்போது ஆட்சியில் உள்ளது என்று மோடியின் ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
73வது சுதந்திரத் தினத்தன்று அவர் பேசியது என்று கூறப்படுகிறது, ஆனால் எந்த தேதி என்று கூற முடியவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.
அதாவது பாகிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இந்தியாவில் மோடி அரசு ஆட்சியிலிருப்பதால் அச்சுறுத்தல்களை முறியடிக்க ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது. இம்ரான் கான் அந்த வீடியோவில் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 73 ஆண்டுகளாக இப்போது உள்ள அரசு போல் அமையவில்லை. தற்போது பலம் வாய்ந்த அரசின் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே நம் ராணுவத்தை நாம் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
வேறு எப்போதையும் விட இப்போது பாகிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் பிறந்துள்ளது. ஏன் இந்தத் தேவை ஏற்பட்டுள்ளது என்றால் 73 ஆண்டுகளாக இல்லாத பலம் வாய்ந்த அரசு இப்போது இந்தியாவில் ஆட்சி செய்கிறது.என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
73வது சுதந்திரத் தினத்தன்று அவர் பேசியது என்று கூறப்படுகிறது, ஆனால் எந்த தேதி என்று கூற முடியவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.
அதாவது பாகிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இந்தியாவில் மோடி அரசு ஆட்சியிலிருப்பதால் அச்சுறுத்தல்களை முறியடிக்க ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது.