ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக குறையும்; ஐ.எம்.எப்! தயாராக இருக்க ப.சிதம்பரம் அறிவுரை

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக குறையும்; ஐ.எம்.எப்! தயாராக இருக்க ப.சிதம்பரம் அறிவுரை

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தை மத்திய அமைச்சர் விமர்சனம் செய்வார்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  உலக பொருளாதார அமைப்பின் 50-ஆவது உச்சி மாநாடு, சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டையொட்டி, உலக அளவிலான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 2.9 சதவீதமாக இருக்கும். அடுத்தடுத்த நிதியாண்டுகளில் முறையே 3.3%, 3.4%-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வளா்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த இரு ஆண்டுகளில் முறையே 5.8%, 6.5%-ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில், ‘சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், பண மதிப்பு நீக்கத்துக்கு முதலில் கண்டனம் தெரிவித்தவர். கீதா கோபிநாத் மீதும் சர்வதேச நாணய நிதியத்தின் மீதும் மத்திய அமைச்சர்கள் நடத்தவுள்ள தாக்குதலுக்கு நாம் தயாராக இருக்கவேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளார்.

  Also see:

   

  Published by:Karthick S
  First published:

  Tags: IMF