பருவநிலை மாற்றம் தொடர்பாக கவலையளிக்க கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளை அமெரிக்கா சேர்த்துள்ளது. உலக வெப்பமயமாதலின் பாதையை தீர்மானிப்பதில் இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றங்களின் பாதிப்பு இந்தியாவில் தென்பட தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளன. காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC) தனது ஆய்வு அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது.
Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட அந்த அறிக்கையில், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பூமியின் சராசரியை விட வேகமாக வெப்பமாகி வருவதாகவும், கடற்கரையோர பகுதிகளில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு உள்ளாகும் 11 நாடுகளின் பட்டியலை அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிக்கை என அழைக்கப்படும் இந்த பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஈராக், பாகிஸ்தான், நிகரகுவா, கொலம்பியா, மியான்மர் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகளிலும் பிராந்தியத்திலும் மீள் தன்மையை உருவாக்குவதன் மூலம் எதிர்கால அபாயங்களைத் தணிப்பதில் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் "வெப்பமடைதல், அதிக தீவிர வானிலை மற்றும் கடல் வடிவங்களுக்கு இடையூறு ஆகியவை சந்திக்கும் என்றும் இதன் மூலம் அவற்றின் ஆற்றல், உணவு, நீர் மற்றும் சுகாதார பாதுகாப்பு போன்றவத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்த 11 நாடுகளில் உயிரியல் பன்முகத்தன்மையின் பெரும் இழப்பு ஏற்படும், இது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலின் பாதையை தீர்மானிப்பதில் இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: மெக்சிகோவில் போதைப் பொருள் கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு: இந்திய பெண் என்ஜினீயர் பலி ஆன சோகம்!
தற்போது, பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் இந்தியாவும் முதல் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இரு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைந்த கார்பன் எரிசக்தி ஆதாரங்களை இணைத்துக்கொண்டாலும், நிலக்கரி பயன்பாட்டில் மாறுவதை பல்வேறு காரணிகள் தடுக்கின்றன.
இந்தியா பொருளாதார ரீதியாக வளரும்போது அதன் வாயு உமிழ்வை அதிகரிக்கும். இந்திய அதிகாரிகள் நிகர-பூஜ்ஜிய இலக்கிற்கு உறுதியளிக்கவில்லை, மாறாக பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை உமிழ்வைக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இளவரசியாக கடைசி பிறந்த நாளை கொண்டாடிய மகோ: அடுத்த வாரம் காதலரை மணக்கிறார்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.