தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியா

தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கத்தார் தலைநகர் தோஹாவில், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலும், தாலிபான் அரசியல் பிரிவு தலைவர் ஸ்டானெக்ஸாய்-யும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படும் என இந்தியா கவலை தெரிவித்தது. இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்றும், எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தக் கூடாது என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியா தலைமையேற்ற கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 13 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா மற்றும் சீன நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

  இதனிடையே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டதை தாலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். தாலிபான்களின் வெற்றி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2001-ஆம் ஆண்டில் நடைபெற்ற நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பை வேரறுக்க ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவம் நுழைந்தது. 2 லட்சம் கோடி ரூபாய் செலவு, 2 ஆயிரத்து 500 வீரர்கள் பலி என 20 ஆண்டுகளை ஆப்கானிஸ்தான் மண்ணில் செலவிட்டது அமெரிக்கா.

  Also Read : இந்தியாவுக்கு தாலிபான்களால் அச்சுறுத்தலா? - தாலிபான் செய்தித்தொடர்பாளர் கூறுவது என்ன?

  ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என கடந்த ஆண்டில் அப்போதைய அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அவருக்குப் பின்னர் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் நாடு திரும்புவார்கள் என அறிவித்தார். ஜனவரி மாதம் முதல் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்பி வந்த நிலையில் திங்கட்கிழமை இரவு, கடைசி விமானமான C-17, அமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: