இந்தியாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் வெங்காய விலை உயர்வு... காரணம் என்ன?

இந்தியாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் வெங்காய விலை உயர்வு... காரணம் என்ன?
வெங்காயம்
  • News18
  • Last Updated: October 3, 2019, 7:31 AM IST
  • Share this:
வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்ததைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதையடுத்து நேபாளத்தில் வெங்காயத்தின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இந்திய ரூபாயில் கிலோவுக்கு 102-ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு சுமையைக் குறைக்கும் வகையில் வங்கதேச வர்த்தக கழகத்தின் மூலம், மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதேபோல, இலங்கையில் வெங்காயத்தின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, இந்திய மதிப்பில் 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also watch

First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்