ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி

நரேந்திர மோடி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

  • Share this:
    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெறவுள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றது.

    பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக் கொண்டது.

    75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின் விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஒரு மாத காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த 1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொண்டார். எனினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

    டி.எஸ்.திருமூர்த்தி


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் டி.எஸ்.திருமூர்த்தி, கூறுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தலைமை ஏற்கும் இந்தியா, கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய 3 விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. அமைதிகாப்புப் படையினரின் நினைவாக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த உள்ளது. சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான குறித்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

    Must Read : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக தமிழகம் வருகை

    ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமை வகித்தது. இதனைத் தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது. இதற்கு முன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபை இயங்கியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: