இந்தியாவுக்கு தாலிபான்களால் அச்சுறுத்தலா? - தாலிபான் செய்தித்தொடர்பாளர் கூறுவது என்ன?

Taliban spokesperson

இந்தியா ஒரு முக்க்கியமான நாடு, தாலிபான்களின் தலைமையிலான புதிய அரசு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

  • Share this:
இந்தியா குறித்தும் இந்தியாவுடனான உறவு குறித்தும் தாலிபான்கள் தலைமையின் கீழ் புதிதாக அமையவுள்ள ஆப்கானிஸ்தான் அரசின் நிலைப்பாடு குறித்து தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் விளக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்கு பிறகு அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தாலிபான்களுக்கு பயந்து அதிபரே நாட்டை விட்டு தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

தற்போதைய நிலையில் தாலிபான்கள் தலைமையின் கீழ் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கிறது. தாலிபான்களால் ஆப்கனில் நிச்சயமற்ற சூழல் உருவானது, இதையடுத்து காபுலில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என பல்வேறு நாட்டினரும் தங்களின் குடிமக்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

புதிய ஆப்கன் அரசின் இந்திய நிலைப்பாடு குறித்து தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

“இந்த பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்க்கியமான நாடு, தாலிபான்களின் தலைமையிலான புதிய அரசு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

Also Read: தலித் தம்பதியினர் மைனர் மகளுடன் மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்!

முந்தைய காலகட்டத்தில் இந்தியா ஆப்கனுக்கு நல்ல நட்பு நாடாக இருந்திக்கிறது. தாலிபான் தலைமையிலான அரசும் இந்தியாவுடன் சுமூக உறவை பராமரிக்கும்” என்றார்.

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டும் தாலிபான்கள், அந்நாட்டுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக தாலிபான்கள் செயல்படுவார்கள் என ஒரு கருத்து உள்ளதே, அது குறித்து என்ன சொல்கிறீர்கள் என கேட்டதற்கு, அது போன்ற ஒரு தகவல் அடிப்படை ஆதாரமற்றது. வேறு எந்த நாடும் எங்களால் ஆபத்தில் இருக்க தாலிபான் அனுமதிக்காது. எங்கள் தரப்பு அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று நாங்கள் இந்தியாவுக்கு உறுதியளிக்கிறோம்.” என தெரிவித்தார்.

Also Read:  சீனாவுடன் நட்புக்கு பாகிஸ்தானுக்கு உதவப்போகும் கழுதைகள்!

பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ARY Newsக்கு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அளித்த பேட்டியில், தாலிபான்களுக்கு பாகிஸ்தான் 2வது வீடு போன்றது. பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் எல்லையை பகிர்கிறது. மதம் என்று வரும் போது நாங்கள் பாகிஸ்க்தானுடன் பாரம்பரிய ரீதியாக ஒன்றுபட்டவர்கள். எனவே பாகிஸ்தானுடன் நட்பை பலப்படுத்த நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்கானிஸ்தானில் நாடுகள் தங்களின் தூதரகங்களை அமைக்க நாங்கள் விரும்புகிறோம். ஆப்கனில் பல்வேறு நாட்டின் தூதர்கள் இருப்பது எங்களுக்கு தான் நன்மை. எங்களுடன் அனைத்து நாடுகளுமே நட்பாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறோம் என கூறினார்.
Published by:Arun
First published: