• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • போர்க்குற்ற விசாரணை: ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி; வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா!

போர்க்குற்ற விசாரணை: ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி; வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா!

ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி

ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இங்கிலாந்து கொண்டுவந்த போர்க்குற்ற விசாரணை மீதான தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவிலை.

  • Share this:
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இங்கிலாந்து கொண்டுவந்த போர்க்குற்ற விசாரணை மீதான தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவிலை.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் பல நாட்களாக நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு நிறைவடைந்தது. இப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது, மேலும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது. பல ஆயிரம் பேர் மாயமாகினர். போர் விதிமுறைகளை மீறி இலங்கை அரசு அப்பட்டமான போர்க்குற்றம் புரிந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி அந்நாட்டின் மீதான சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கொண்டு வந்தது.

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஒன்று ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் அர்ஜெண்டினா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, பஹ்ரைன், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.

முன்னதாக இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசை வலியுறுத்தின.

வாக்கெடுப்புக்கு முன்னதாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி தம்பிதுரை பேசுகையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என்று கூறினார். பிரதமர் மோடி உறுதியளித்தபடி இந்திய அரசு செயல்பட வேண்டும். ஐநா மனித உரிமை கவுன்சிலியில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே கடந்த மார்ச் முதல் வாரத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினாலும் கூட உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையிட விடப்போவதில்லை என இலங்கையின் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகா பேசியது நினைவுகூறத்தக்கது.

முன்னதாக கடந்த 2014ல் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளாமல் விலகியிருந்தது. அப்போது இலங்கைக்கு எதிராக 23 நாடுகளும், ஆதரவாக 47 நாடுகளும் வாக்களித்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: