ஹங்கேரியில் இணையதள ஆசிரியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பேரணி - அரசுக்கு எதிராகத் திரண்ட மக்கள்

ஹங்கேரியில் இணையதள ஆசிரியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.

ஹங்கேரியில் இணையதள ஆசிரியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பேரணி - அரசுக்கு எதிராகத் திரண்ட மக்கள்
ஹங்கேரியில் இணையதள ஆசிரியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பேரணி - அரசுக்கு எதிராகத் திரண்ட மக்கள்
  • Share this:
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி ஹங்கேரியில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஹங்கேரியில் பிரபலமான இன்டெக்ஸ் இணைய தளத்தின் தலைமை ஆசிரியர் கடந்த வாரம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஹங்கேரியின் கட்சி சார்பற்ற ஊடகமான தங்களது வலைத்தளத்தை அரசு அழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக ராஜினாமா செய்தனர்.

Also read: கொரோனா பரவலுக்கும் எனக்கும் தொடர்பா? - பில்கேட்ஸ் விளக்கம்

இந்நிலையில் புதாஃபெஸ்ட் நகரில் குவிந்த பொதுமக்கள் இன்டெக்ஸ் இணையதளத்திற்கு ஆதரவாகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் முழங்கினர். ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading