முகப்பு /செய்தி /உலகம் / யாழ்ப்பாணத்தில் முழு அடைப்பு... இலங்கையில் களையிழந்த சுதந்திர தின விழா..!

யாழ்ப்பாணத்தில் முழு அடைப்பு... இலங்கையில் களையிழந்த சுதந்திர தின விழா..!

இலங்கை சுதந்திர தின விழா

இலங்கை சுதந்திர தின விழா

Independence Day Celebration in SriLanka | நாடு பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் சூழலில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiasrilanka

இலங்கை வலுவடைவதற்கு தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சுதந்திர தின நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கையில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்நாட்டு தலைநகர் கொழும்புவில் அதிபர் விக்ரமசிங்கே தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.

நாடு பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் சூழலில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து யாழ்ப்பாணத்தில் முழு அடைப்பு போராட்டம் அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தேசிய கொடிக்கு பதிலாக கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் சுதந்திர தின விழா களையிழந்தே காணப்பட்டது.

First published:

Tags: Srilanka