Home /News /international /

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிரான்ஸ் அரசு

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிரான்ஸ் அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மீண்டும் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    திரையரங்குகள், விளையாட்டு மையங்கள், பொது போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாளர்கள் கட்டாயமாக வாரம் 3 நாட்களுக்கு வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.

    பிரான்சில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகள் இன்னும் 3 வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அதிர்ச்சியுற்ற பிரான்ஸ் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இதையடுத்து அதிபர் இம்மானுவேல் மேக்ரன் அரசின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து திட்டங்களை வகுத்தார். சமீபத்தில்தான் அங்கு தொற்று பரவலையொட்டி இரவு நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று அதிகரித்ததால் அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில் கொரோனா பிரச்னை முக்கிய விவகாரமாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அறிவிக்கப்பட்டபடி, ஜனவரி 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

    தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

    மேலும், தலைநகர் டெல்லியில் தியேட்டர்கள், பள்ளிகள் மூடல் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று விதிக்கப்பட்டுள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: France

    அடுத்த செய்தி