சீனாவுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் போராட்டம் - அதிர்ந்த ஹாங்காங்!

ஹாங்காங் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் வெள்ளை நிறச் சீருடை அணிந்திருந்தனர்.

சீனாவுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் போராட்டம் - அதிர்ந்த ஹாங்காங்!
ஹாங்காங் போராட்டம்.(Reuters)
  • News18
  • Last Updated: June 10, 2019, 11:08 AM IST
  • Share this:
ஹாங்காங் நகரில் சுமார் 10 லட்சம் பேர் இணைந்து சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கி நடத்திய போராட்டம் இன்று சர்வதேச அளவில் எதிரொலித்துள்ளது.

ஹாங்காங் நகரில் கைதாகும் குற்றம் சாட்டப்பட்டோர் அல்லது குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் ஒப்படைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங் நகர மக்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சீனாவின் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங் நகர விதிகளில் சுமார் 7 மணி நேரம் ஊர்வலப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய அரசு தலைமையகங்கள் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.


ஹாங்காங் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் வெள்ளை நிறச் சீருடை அணிந்திருந்தனர். மக்கள் குரல் சீனாவுக்கு ஹாங்காங் நிர்வாகத்துக்கும் கேட்க வேண்டுமென மக்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் பார்க்க: அர்னால்டு மகளைக் கரம்பிடித்த அவெஞ்சர்ஸ் நாயகன்!
First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்