Bird Flu | சீனாவில் மனிதர்களுக்கு புதிய வகை பறவைக்காய்ச்சல் பாதிப்பு

Youtube Video

உலகிலேயே முதன்முறையாக புதிய வகை பறவைக்காய்ச்சல் பாதிப்பு சீனாவில் மனிதர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
    சீனாவின் ஜியாங்க்சூ மாகாணத்தில் zhen-jiang என்ற நகரில் 41 வயது நபர் இந்த புதிய பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பறவைகளிடம் காணப்படும் H10N3 என்ற வைரஸ் அந்த நபரின் உடலில் காணப்பட்டதுடன் உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவில் பல்வேறு விதமான பறவைக்காய்ச்சல் இருந்து வந்தாலும் , கோழிகள் உள்ளிட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு இந்த புதிய வைரஸ் கிருமி தாக்கம் காணப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... தமிழகத்தில் தடுப்பூசித் தட்டுப்பாடு: பொறுப்பேற்க வேண்டியது யார்?

    கடந்த ஏப்ரலில் H5N6 என்ற பறவைக்காய்ச்சல் அந்தநாட்டில் வேகமாக பரவியது, வனப்பகுதியில் வளரும் பறவை இனங்களில் திடீர் உடல்நலக்குறைவு காணப்பட்ட நிலையில் புதிய கிருமி சீன மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: