ஆபாசப் படங்களை பார்த்து ஆய்வு செய்வதற்காகவே, அமெரிக்காவில் ஒரு கல்லூரி ‘போனாகிராபி’ குறித்த புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்ற தனியார் கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் ‘போனாகிராபி’ குறித்த புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இங்கு மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்த்து, விவாதிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு குறித்த விவரங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "FILM 2000: Porn" எனும் பாடத்திட்டத்தின் கீழ் இந்த பாடமுறை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்த்து இனம், வகுப்பு மற்றும் பாலினம் ஆகியவற்றின் பாலியல் பண்புகளை பற்றியும் மற்றும் பரிசோதனை மற்றும் தீவிர கலை வடிவம் சார்ந்த விஷயங்களை ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: கொரோனாவுடன் அதிக நாள் போராட்டம் நடத்திய நபர் இவர் தான் - ஆய்வில் தகவல்
கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் விருப்பம் சார்ந்த அடிப்படையில் வழங்கப்படும் இந்த பாடத்திட்டம் ஆனது சமூக விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகிறது என கல்லூரி தெரிவித்து உள்ளது. மேலும் இந்த படிப்பு மாணவர்களை, பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவதில் இருந்து தவிர்ப்பது குறித்து ஆக்கபூர்வமாக முடிவினை எடுக்க உதவும் என்று கல்லூரி நிர்வாகம் நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக யூஎஸ்ஏ டூடே வெளியிட்டுள்ள செய்தியில், கல்லூரியின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஷீலா ரப்பஸ்ஸோ கூறியதாவது, கல்லூரியில் இந்த பாடத்திட்டம் புதிதாக கொண்டு வரப்பட்டதல்ல. இது கடந்த காலங்களிலும் பலமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இடையே கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக இந்த பாடப்பிரிவில் 20 மாணவர்கள் வரை சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். மற்ற உயர்கல்வி நிறுவனங்களைப் போலவே, எங்கள் கல்லூரியும் சவாலான தலைப்புகளையும் அவற்றின் பரவலையும் தாக்கத்தையும் நன்கு புரிந்துகொள்வதற்காக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.