முகப்பு /செய்தி /உலகம் / கோர நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் அட்டூழியம்.. மீட்பு குழுவினர் போல நடித்து பணம் லேப்டாப் திருடிய 48 பேர் கைது

கோர நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் அட்டூழியம்.. மீட்பு குழுவினர் போல நடித்து பணம் லேப்டாப் திருடிய 48 பேர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணம், பொருள்களை திருடிய 48 பேரை துருக்கி காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul

பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த கோர நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் வரலாறு காணாத பாதிப்பை கண்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 28,000ஐ கடந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் மீட்பு பணிக்காக குழுக்களை அனுப்பியும், நிதி உள்ளிட்ட பல்வேறு வகையிலும் உதவிகளை செய்து வருகிறன. லட்சக்கணக்கான மக்கள், வீடுகள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி சாலைகள் வசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கோரமான சூழலில் கூட மனித நேயம் இன்றி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் திருடிய 48 பேரை துருக்கி காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நபர்கள் மீட்பு குழுவினர் போல நடித்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் உடமைகளை திருடி சென்றுள்ளனர். இவர்களிடம் இருந்து 11,000 அமெரிக்க டாலர், 20 செல்போன்கள், எட்டு லேப்டாப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என துருக்கி அதிபர் எர்டோகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். துருக்கி நாட்டில் 3 மாதம் அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பேரிடர் சூழலில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள போலீசாருக்கு அரசு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.

First published:

Tags: Earthquake, Turkey, Turkey Earthquake