அமெரிக்க செனட் தேர்தல்: அதிபர் ட்ரம்ப் கட்சி முன்னிலை

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் 100 இடங்களுக்கும், கீழவையில் உள்ள 218 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளில் இதுவரை வெளியான 67 செனட் பதவிகளில், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.

news18
Updated: November 7, 2018, 9:00 AM IST
அமெரிக்க செனட் தேர்தல்: அதிபர் ட்ரம்ப் கட்சி முன்னிலை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
news18
Updated: November 7, 2018, 9:00 AM IST
அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் இதுவரை முடிவு வெளியான 67 செனட் பதவிகளில், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மினியாபோலிஸில் வாக்குப்பதிவு நிலையத்தில் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.


அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் 100 இடங்களுக்கும், கீழவையில் உள்ள 218 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

நெவடாவில் உள்ள ஒரு மாலில், மாலை நேரத்தில் மக்கள் வாக்களிக்கின்றனர்


பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்காளர்கள் வரிசையில்  காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு காரணமாக, வாக்குப் பதிவு தாமதமானது.அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நிறைவடைந்த மாகாணங்களில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்கின்றனர்.


இதுவரை முடிவுகள் வெளியான 67 செனட் பதவிகளில், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி 43 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

கிறிஸ்டன் லீச் என்பவர் தனது 6 மாத மகளுடன் வந்து ,அட்லாண்டாவில் உள்ள  நோர்த் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.


கீழவைகளை பொறுத்தவரையில், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு 9 இடங்களும், குடியரசு கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.

Also see...

First published: November 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்