2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பொதுமக்கள் அவதியை சந்தித்து வருகின்றனர்.
"இலங்கையில் பல்வேறு குடும்பங்கள் முறையாக உணவு உண்பதற்கே வழியின்றி தவிக்கின்றனர். அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல குழந்தைகள் பட்டினியுடன் இரவு படுக்க செல்கின்றனர்" என ஐநா சபையின் யுனிசெப் அமைப்பு ஆய்வு கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பெரடனியா பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில், 2019ஆம் ஆண்டு அதாவது கோவிட் பாதிப்புக்கு முன்னதாக 30 லட்சம் மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்தனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை தொட்டுள்ளது. நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலையில் உள்ளனர்.மேலும், அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சுமார் 500 மருத்துவர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும், 800 மருத்துவர்கள் குடியேற காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'நான் ஒரு பேய், குழந்தைகளை கொன்றது நான்தான்' - 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியரின் பகீர் வாக்குமூலம்!
இதன் காரணமாக பல மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும், அரசு இதில் தலையிட்டு நிலைமையை சீர் செய்யாவிட்டால் சூழல் மேலும் மோசமாகும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் சில மாசங்களுக்கு முன் ஏற்பட்ட மக்கள் புரட்சியில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச அமைப்புகளிடம் உதவிகளைப் பெற இலங்கை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Economy, Poverty, Sri Lanka, Sri Lanka political crisis